ஹைலைட்ஸ்:

  • சூர்யா-ஜோதிகாவின் மகள் ஒரு தனுஷ் ரசிகை
  • ஸ்ரேயா சர்மா, தனுஷை ஜோடியாக பார்க்க விரும்பும் ரசிகர்கள்

சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா, ஜோதிகா மகளாக நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் ஸ்ரேயா சர்மா. ரஜினியின் எந்திரன் படத்தில் ஒரு காட்சியில் வந்தார். குழந்தை நட்சத்திரமாக அசத்தி வந்த ஸ்ரேயா நன்றாக வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார்.

தற்போது அவர் பேபி ஸ்ரேயா இல்லை ஹீரோயின். தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஸ்ரேயா லைட்டாக வெயிட் போட்டு பூசினாற் போன்று இருக்கிறார்.

அவர் இன்ஸ்டாகிராமில் ரொம்பவே ஆக்டிவ். அவ்வப்போது தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தான் தனுஷ் ரசிகை என்று தெரிவித்திருக்கிறார் ஸ்ரேயா.

நடிப்பு ராட்சசனான தனுஷுக்கு அவர் ரசிகையானதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவர் சொன்னதை கேட்ட ரசிகர்களோ, தனுஷ் உங்கள் படத்தில் ஸ்ரேயாவை ஹீரோயினாக நடிக்க வைக்கலாமே என்று ஐடியா கொடுத்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் இருக்கும் ஹீரோயின்கள் எல்லாம் குச்சி, குச்சியாக இருக்கிறார்கள். இந்நிலையில் ஸ்ரேயா கொழுக் மொழுக் என்று அழகாக இருக்கிறார். ஹன்சிகா நடிக்க வந்த புதிதில் இருந்தபோது எப்படி இருந்தாரோ அதே போன்று இப்பொழுது ஸ்ரேயா இருக்கிறார்.

ஸ்ரேயா, தனுஷ் ஜோடியை பார்க்க ஆவலாக இருக்கிறோம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் தனுஷ் அமெரிக்காவில் இருக்கிறார். நான்கு மாதங்களாக அவர் அமெரிக்காவில் தங்கியிருக்கிறார்.

தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ‘மகள்’இன்னும் இரண்டு வாரங்களில் ஊர் திரும்பிவிடுவாராம். சூர்யாவின் ரீல் மகளை தனுஷுடன் பார்க்க விரும்புகிறார்கள் ரசிகர்கள். முன்னதாக விஜய் சேதுபதியின் ரீல் மகளான க்ரித்தி ஷெட்டியும், தனுஷும் சேர்ந்து பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்றார் க்ரித்தி ஷெட்டி.

தான் தமிழ் படம் எதிலும் நடிக்கவில்லை என்று ட்விட்டரில் விளக்கம் அளித்தார் க்ரித்தி. அவர் நடித்த உப்பேனா தெலுங்கு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.