சூர்யாவின் 39வது படத்தை தா.செ.ஞானவேல் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் இந்தப்படத்தின் டைட்டில் ‘ஜெய் பீம்‘ மற்றும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்தப்படத்தின் சென்சார் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘ஜெய் பீம்’ படத்தில் சூர்யா ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கு இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கும் இந்தப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளது.

‘ஜெய் பீம்’ படத்தில் இருளர், பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளதாகவும், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் கெளரவ வேடமாக அல்லாமல் படம் முழுக்க வருவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல்ல மாஸ்.. அடுத்து ரொமான்ஸ்: ‘அண்ணாத்த’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது தணிக்கைப் பணிகள் முடிந்துள்ளன. இதற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகளவில் இருப்பதால் படத்திற்கு பெரியவர்கள் மட்டும் பார்க்கும் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாககூறப்படுகிறது.

சூர்யாவின் 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்தப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாக உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி வருகின்ற நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில்நேரடியாக ‘ஜெய் பீம்’ வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் பேசுபொருளான நடிகர் ஷாருக்கான் மகன் கைது!