ஹைலைட்ஸ்:

  • இசையமைப்பாளர் டி.எஸ். முரளிதரன் மரணம்
  • சூர்யாவின் ஸ்ரீ படத்திற்கு இசையமைத்தவர்

புஷ்பவாசகன் இயக்கத்தில் சூர்யா நடித்த ஸ்ரீ படம் கடந்த 2002ம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் ஸ்ருதிகா, காயத்ரி ஜெயராமன், விஜயகுமார், ஸ்ரீவித்யா, வடிவேலு, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஸ்ரீ படம் மூலம் கோலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.எஸ். முரளிதரன். அந்த படத்தில் வந்த வசந்த சேனா பாடல் ஹிட்டானது. வசந்த சேனா பாடலை ஹரிஷ் ராகவேந்திராவும், சித்ராவும் பாடியிருந்தார்கள். பிரபல இயக்குநரான ஆர்.வி. உதயகுமார் சில பாடல்களை எழுதியிருந்தார்.

முரளிதரன் தன் குடும்பத்துடன் சாலிகிராமத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார். இதையடுத்து சில மணிநேரத்திலேயே அவரின் இறுதிச்சடங்கு நடந்தது.

முரளிதரனின் மறைவு குறித்து அறிந்த சூர்யா ரசிகர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். முரளிதரனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் கூறியுள்ளனர்.

2002ம் ஆண்டு இசையமைப்பாளர் ஆனபோதிலும் முரளிதரனுக்கு 2020ம் ஆண்டு தான் அடுத்த படம் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வரி விலக்கு: விஜய்யின் மேல்முறையீட்டு வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற உத்தரவு