சூர்யாவின் 39வது படத்தை தா.செ.ஞானவேல் என்பவர் இயக்கி வருகிறார். இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் இந்தப்படத்தின் டைட்டில் ‘ஜெய் பீம்‘ மற்றும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்தப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

‘ஜெய் பீம்’ படத்தில் சூர்யா ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கும் இந்தப்படம் வரும் நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி வெளியீடாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஜெய் பீம்’ படத்தில் இருளர், பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளதாகவும், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் கெளரவ வேடமாக அல்லாமல் படம் முழுக்க வருவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாவ்… வேற லெவல் தல: இணையத்தை கலக்கும் ‘வலிமை’ பட லேட்டஸ்ட் ஸ்டில்கள்!
இந்நிலையில் ‘ஜெய் பீம்’ படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ’நாளை ஒரு சிறப்பான நாள்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் நாளை இந்தப்படத்தின் டிரெய்லர் அல்லது பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார். விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகில் படம் டீசர்: என்ன கதைகளமாக இருக்கும்! ஒரு அலசல்!