ஹைலைட்ஸ்:

  • சென்னையில் பொதுஇடத்தில் நடந்த அண்ணாத்த ஷூட்டிங்
  • ஷாப்பிங் மாலில் ரஜினி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் பொது இடத்தில் நடக்கிறது என்றால் பொதுவாகவே அதிகம் கூட்டம் கூடிவிடும். அதனாலேயே ரஜினியின் படங்கள் பெருமைப்பாலும் ஸ்டூடியோவில் மட்டுமே படமாக்கப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது சூப்பர்ஸ்டார் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் சென்னை வடபழனியில் உள்ள ஒரு பிரபல மாலில் நடைபெற்று இருக்கிறது. அதன் வீடியோ ஒன்றும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அது மால் என்றாலும் ஷூட்டிங் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்து இருந்ததால் ரசிகர்கள் கூடுவது தவிர்க்கப்பட்டது. குழுவினரும் கூட்டத்தை சிறப்பாக கட்டுப்படுத்தி இருந்தனர். ஷூட்டிங் முடிந்தபிறகு ரஜினிகாந்த் அவரது ரசிகர்களை நோக்கி கையசைத்தார்.

ரஜினி இன்று அண்ணாத்த ஷூட்டிங்கை முழுமையாயாக முடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைய ஒரு வாரம் ஆகலாம் என தெரிகிறது. அதன் பின் கொல்கத்தாவில் ஷூட்டிங் நடத்த படக்குழு செல்லும் எனவும் கூறப்படுகிறது.

தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருப்பதால் படத்தினை முடிக்க இயக்குனர் சிவா முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்.