பிரேமம் படம் மூலமாக ஓட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். தற்போது மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரன் தனது வலைத்தள பக்கத்தில் பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டியிடம் மன்னிப்பு கோரி பகிர்ந்துள்ள பதிவு ஒன்று பரபரப்பை கிளப்பி வருகிறது.

நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை குவித்த படம் பிரேமம். இந்த படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார். இவர் ‘சென்னை எக்ஸ்பிரஸ்‘ படம் வெளியான போது, அதில் தமிழ் குறித்துக் காட்டியிருப்பது தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்தார். அவரின் கருத்தால் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ இயக்குநர் ரோஹித் ஷெட்டிக்கும், அல்போன்ஸ் புத்திரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் தமிழ் குறித்துக் காட்டியதில் ரோஹித் ஷெட்டியுடன் எனக்குப் பிரச்சினை ஏற்பட்டதாக நீண்ட நாட்களுக்கு முன்பு நான் கூறியிருந்தேன். அது என்னுடைய தனிப்பட்ட கருத்து. தமிழர்களைக் களங்கப்படுத்த வேண்டும் என்பது அவருடைய நோக்கமல்ல என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.

மிஷ்கினின் ‘பிசாசு 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அவர் ஷங்கரின் பாடல்கள் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளால் உந்தப்பட்டு தனது படத்தின் காட்சிகளை வைப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே, என்னுடைய கருத்துகள் குறித்து நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தற்போது அவரின் ‘சிங்கம்’ இரண்டாம் பாகம் குறித்து நான் ஒரு நல்ல விஷயம் சொல்கிறேன். அரசியல் கட்சிகளிடமிருந்து பணம் பெறுவது குறித்து நாயகனின் அம்மா கோபப்படுவது போன்ற ஒரு காட்சி படத்தில் உண்டு. அந்தக் காட்சியில் நான் அழுதுவிட்டேன். கதாநாயகன் தன் தாயிடம் தோற்றுப்போகும் அந்தக் காட்சி எனக்குப் பிடித்திருந்தது.

என்னுடைய ஒட்டுமொத்தப் படம் பார்க்கும் வரலாற்றில் அப்படி ஒரு காட்சியை நான் பார்த்ததே இல்லை. அதுபோன்ற ஒரு காட்சியை அமைத்த உங்களுக்கு என்னுடைய மரியாதையைச் சமர்ப்பிக்கிறேன். உங்களுடைய பெரும்பாலான படங்கள் எனக்குப் பிடிக்கும். உங்களின் கோல்மால் சீரிஸ், சிங்கம் சிரீஸ், சிம்பா, சூரியவன்ஷி ஆகிய படத்துக்காக நான் காத்திருக்கிறேன் சார். இந்த இளைய சகோதரனை மன்னிக்கவும் என பதிவிட்டுள்ளார்.