ஹைலைட்ஸ்:

  • சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
  • சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் ஹைதராபாத் படப்பிடிப்பு நிறைவு.
  • சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

அதிகரித்து வரும் கொரொனோ தொற்றில் இருந்தும் ஒவ்வொருவரும் தங்களை தற்காத்து கொள்ள தடுப்பூசி அவசியம் என்கின்ற முழக்கத்தோடு பிரபலங்கள் பலரும் கொரொனோ தடுப்பூசி போட்டு வருகின்றனர். தடுப்பூசி குறித்த அச்சத்தை மக்கள் மத்தியில் இருந்து போக்குவதற்காக பலரும் தடுப்பூசி போடப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி பாதிப்பு எண்ணிக்கை தினமும் உயருகிறது. உயிரிழப்புகளும் அதிகரிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என்பதை பிரபலங்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அவரின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். புகைப்படத்திற்கு நம்ம தலைவர் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டார். கொரோனா வைரஸிற்கு எதிரான இந்த போரை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர் கொள்வோம் என கேப்ஷன் போட்டுள்ளார் சௌந்தர்யா. இந்த புகைப்படத்தை தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

அய்யோ அது நான் இல்லைப்பா: பதறியடித்து விளக்கம் கொடுத்த லொள்ளு சபா மாறன்!
ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சதீஷ், சூரி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக பலத்த கட்டுப்பாடுகளுடன் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தின் ஹைதராபாத் படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்த் நேற்றைய தினம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து போயஸ் கார்டன் வீட்டிற்கு சென்ற அவரை, மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து வரவேற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய மறுநாளே நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.