ஹைலைட்ஸ்:

  • ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி
  • அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்தார் ரஜினி
  • தீபாவளிக்கு வெளியாகும் அண்ணாத்த

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. கொரோனா வைரஸ் பிரச்சனையால் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பை கடந்த டிசம்பர் மாதம் துவங்கினார்கள். ஆனால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினிக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்பட்டு ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு சென்னை திரும்பிய அவர் ஓய்வில் இருந்தார்.

சென்னையில் இருக்கும் கோகுலம் ஸ்டுடியோஸில் சில காட்சிகளை படமாக்கினார் சிவா. அந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ரஜினி. இதையடுத்து கடந்த மாதம் 8ம் தேதி தனி விமானம் மூலம் ஹைதராபாத்துக்கு சென்றார் ரஜினி. அங்கிருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம்சிட்டியில் படப்பிடிப்பு நடந்தது.

இதற்கிடையே கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்தது. ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு படக்குழு அவரை ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வது போன்று பத்திரமாக பார்த்துக் கொண்டது.

செட்டில் இருந்த அனைவரும் பிபிஇ சூட் அணிந்திருந்தனர். ரஜினிக்கு அருகில் யாரும் செல்லக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்தது. இதையடுத்து ரஜினி தனி விமானம் மூலம் சென்னைக்கு திரும்பியுள்ளார்.
வீட்டிற்கு வந்த ரஜினியை ஆரத்தி எடுத்து வரவேற்றிருக்கிறார் மனைவி லதா. அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்ததாக டப்பிங் பணியை துவங்கவிருக்கிறார்கள்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் அண்ணாத்த படத்தை தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக நவம்பர் மாதம் 4ம் தேதி தியேட்டர்களில் வெளியிடவிருக்கிறார்கள். அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடத்திருக்கிறது. படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

அடுத்த மாதம் சந்திக்கலாம் கண்ணா: காமெடி நடிகருக்கு போன் செய்து திக்குமுக்காட வைத்த ரஜினிஅவர் ரஜினி படத்திற்கு இசையமைத்திருப்பது இதுவே முதல் முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஜினி, நடிகர் கிங்காங்கிற்கு போன் செய்து பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.