ஹைலைட்ஸ்:

  • வசூல் வேட்டை நடத்தும் லவ் ஸ்டோரி
  • நாக சைதன்யாவுக்கு கை கொடுத்த லவ் ஸ்டோரி

சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்த லவ் ஸ்டோரி படம் செப்டம்பர் 24ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. ரிலீஸ் தேதி பலமுறை தள்ளிப் போய் ஒரு வழியாக ரிலீஸானது.

படம் ரிலீஸான அன்றே உலக அளவில் ரூ. 10 கோடி வசூல் செய்தது. கொரோனா இரண்டாம் அலை ஓய்ந்த பிறகு வெளியான படங்களில் முதல் நாளே அதிகம் வசூல் செய்த படம் என்கிற பெருமையை பெற்றது லவ் ஸ்டோரி.

அந்த படம் ரிலீஸான 10 நாட்களில் உலக அளவில் ரூ. 55 கோடி வசூல் செய்திருக்கிறதாம். மேலும் லவ் ஸ்டோரி படம் ஓடும் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டமாக இருக்கிறது. அதனால் நாக சைதன்யா படத்தின் வசூல் விரைவில் ரூ. 100 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லவ் ஸ்டோரி படம் வசூல் வேட்டை நடத்தி வருவதால் நாக சைதன்யா மகிழ்ச்சியில் இருக்கிறாராம். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

ஹைதராபாத்தில் நடந்த லவ் ஸ்டோரி சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா இயக்குநர் சேகரை பாராட்டினார். தன் மகனை ஸ்டார் ஆக்டராக்கியதற்கு சேகர் கம்முலாவுக்கு நன்றி தெரிவித்தார்.

சேகர் கம்முலா அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்கவிருக்கிறார். லவ் ஸ்டோரிக்கு கிடைக்கும் ஆதரவை பார்க்கும் தமிழ் ரசிகர்களுக்கு, தனுஷ் படம் மீது தற்போதே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Samantha:சமந்தாவும், கணவரும் பிரிய டிசைனருடனான உறவு காரணமா?