ஹைலைட்ஸ்:

  • முதல்வர் ஸ்டாலினுக்கு இயக்குநர் பேரரசு கோரிக்கை
  • தமிழ்நாட்டு பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும்- பேரரசு

விஜய்யின் திருப்பாச்சி படம் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானவர் பேரரசு. திருப்பாச்சியை அடுத்து மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து சிவகாசி படத்தை இயக்கினார். இரண்டு படங்களுமே விஜய்யின் கெரியரில் முக்கியமானவை ஆகும்.

அதன் பிறகு பேரரசு இயக்கிய படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அவர் படம் இயக்கி 6 ஆண்டுகளாகிறது. பேரரசு ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர்.

சினிமா தவிர்த்து நாட்டு நடப்பு பற்றியும் ட்வீட் செய்கிறார். அவரின் பல ட்வீட்டுகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்நிலையில் தமிழ் மொழி குறித்து பேரரசு ட்வீட் செய்திருக்கிறார்.

அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தமிழில் அர்ச்சனைக்கு ஆலோசனை வரவேற்கத்தக்க ஆலோசனை!

இது தமிழ்ப்பற்றின் வெளிப்பாடு! அதே நேரம் நம் அரசு இன்னொரு ஆலோசனை நடத்த வேண்டும்! பெரும்பாலான தனியார் பள்ளிகளில் விருப்பப் பாடமாகத் தான் தமிழ் பாடம் இருக்கிறது.

விருப்பப் பாடமாக இருப்பதற்கு தமிழ் விருந்தாளி மொழியல்ல, அது நம் தாய்மொழி!

அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும். இங்கே தமிழை அடமானம் வைத்து, கல்வி வியாபாரம் செய்யப்படுகிறது!

ஐந்தாவது, ஆறாவது படிக்கும் மாணவர்களுக்கு கூட தமிழ் தெரியாத சூழ்நிலை தான் தற்பொழுது இருக்கிறது!

சாமிக்கு தமிழில் அர்ச்சனை அபிஷேக பாலாகும். பள்ளியில் தமிழ்ப்பாடம் குழந்தைக்கு தாய்ப்பால் ஆகும்!

தமிழக அரசு இதையும் ஆலோசனை செய்தால் நன்றாக இருக்கும் என்பது எம் தாழ்மையான விண்ணப்பம்! என்று தெரிவித்துள்ளார்.

பேரரசுவின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

சரியாக சொன்னீர்கள் இயக்குநரே. ஆனால் என் பிள்ளைக்கு தமிழ் தெரியாது என்று சொல்வதில் பெருமைப்படும் பெற்றோர் இருக்கும் வரை உங்களின் விண்ணப்பம் ஏற்கப்படாது.

தாய் மொழி தெரியாது என்பதை பெருமையாக சொல்லும் மாணவன் இல்லா நிலையை உருவாக்குவது கடினம். இருப்பினும் சரியான நேரத்தில் சரியான கோரிக்கை வைத்திருக்கிறீர்கள்.

கோவில்களை பற்றி சொன்னீர்கள், பிற மத வழிபாட்டுதலங்களிலும் தமிழில் பிரார்த்தனை நடத்துமாறு ஏன் கேரிக்கை விடுக்கவில்லை என்று கேட்டுள்ளனர்.

எம்.ஜி.ஆர். கையில் இருக்கும் குழந்தை இப்போ ஒரு மாஸ் ஹீரோ: யார்னு தெரியுதா?