கெளதம் வாசுதேவ் இயக்கத்தில் அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி. தற்போது பார்வதி தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் பார்வதி சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் அண்மையில் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடியபோது, சிலரின் சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு தனது பாணியில் பதில் அளித்து அசத்தியுள்ளார் பார்வதி.

அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரபல மலையாள நடிகையான பார்வதி நாயர். அந்த படத்தில் விக்டர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். ’என்னை அறிந்தால்’ படத்தை தொடர்ந்து கமல்ஹாசனின் ’உத்தம வில்லன்’, கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கத்தில் ‘மாலை நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

பிரபல இயக்குனர் சொர்ணம் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி!
தற்போது வைபவ் நடிப்பில் உருவாகி வரும் ஆலம்பனா என்ற தமிழ் படத்திலும், மேலும் ஒரு இந்தி படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பார்வதிக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ் உள்ளனர். இந்நிலையில் அண்மையில் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடினார் பார்வதி. அப்போது ரசிகர்கள் கேட்ட சில சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்துள்ளார் பார்வதி.

கொரோனா லாக்டவுன் காரணமாக வீடுகளில் முடங்கி இருக்கும் சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர். அப்போது ரசிகர்கள் பலர் கேலியாக பேசினாலும், சிலர் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தங்களிலும் பேசி வருகின்றனர். இந்நிலையில் பார்வதியிடம் ரசிகர் ஒருவர் உங்களுடைய சைஸ் என்ன? என கேட்ட போது, எனது ஷூ சைஸ் 37 என்றும் டிரஸ் சைஸ் எஸ் என்றும் தடாலடியாக பதிலளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.