‘தென்மேற்கு பருவக்காற்று’ தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இவரின் இயக்கத்தில் இடம் பொருள் ஏவல், மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வெளியீட்டிற்கு காத்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அடுத்ததாக ஜிவி பிரகாஷ் குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் சீனுராமசாமி.

நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களின் மூலம் எதார்த்த இயக்குனராக தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்படுபவர் இயக்குனர் சீனுராமசாமி. இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இடம் பொருள் ஏவல்’ நீண்ட காலமாக வெளியீட்டிற்கு காத்து கொண்டிருக்கின்றன. அதனை தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

இந்நிலையில் தற்போது தற்போது ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்க உள்ள புதிய படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார் சீனுராமசாமி. மதுரை மற்றும் அதைச்சுற்றியுள்ள நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனு ராமசாமியின் முந்தைய படங்களை போல் அல்லாமல் ஆக்ஷன் த்ரில்லர் களமாக படமாக இதனை இயக்க உள்ளார் சீனுராமசாமி.

ரங்கன் வாத்தியாராக என்னை செதுக்கியதற்கு நன்றி: நடிகர் பசுபதி நெகிழ்ச்சி!
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளவர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதியுடன் அதிக படங்களில் நடித்த காயத்ரி இந்தப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடிக்க உள்ளார். சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் படத்திலும் காயத்ரி தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் படத்தை முடித்துவிட்டு மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் சீனு ராமசாமி.. இந்தப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவுள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் ஏற்கனவே வெயில், ஐங்கரன், பேச்சுலர் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி ரிலீசுக்காக காத்து கொண்டிருக்கின்றன. இதில் ஐங்கரன் படம் அடுத்த மாதம் நேரடியாக சோனி லைவ்வில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.