Google Doodle honours Kano Jigoro

“ஜூடோவின் தந்தை” என்று குறிப்பிடப்படும் ஜப்பானை சேர்ந்த மறைந்த பேராசிரியர் கனோ ஜிகோரோவின் (Kano Jigoro) 161-ஆவது பிறந்தநாள் இன்று (அக்டோபர் 28) கொண்டாடப்படுகிறது. நவீன ஜப்பானிய தற்காப்புக் கலையின் ஒரு பாணியாக இருக்கும் ஜூடோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் இடம்பெற்றுள்ளது இதன் சிறப்புக்கு எடுத்து காட்டாகும். தற்காப்பு கலை மூலம் எதிரில் சண்டை போடுபவரை வீழ்த்தி கீழே தள்ளும் போது கூட நீதி, மரியாதை, பாதுகாப்பு மற்றும் பணிவு ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு வழியாக கண்ட பெருமைக்குரியவர் ஜூடோவின் தந்தையான பேராசிரியர் கனோ ஜிகோரோ.ஜூடோவை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், எதிரிகளுடன் சண்டையிடும் போது கூட மக்களை ஒன்றிணைக்கும் ஒரு வழியாக தற்காப்பு கலையை கண்ட, கனோ ஜிகோரோவின் பங்களிப்பை போற்றும் வகையில் வித்தியாசமான டூடுலை வெளியிட்டு அவரை பெருமைபடுத்தி உள்ளது கூகுள். உலகளவில் சிறந்த தற்காப்பு கலையாக திகழும் ஜூடோவின் தந்தையான கானோ ஜிகோரோவின் 161-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்டு அவரை பெருமைபடுத்தி இருக்கிறது கூகுள்.

1860-ம் ஆண்டில் Mikage என்ற பகுதியில் பிறந்த இவர்,11-வது வயதில் தனது தந்தையுடன் டோக்கியோ நகருக்கு குடிபெயர்ந்தார். உடல் வலிமையை வளர்க்க ஆர்வமாக இருந்த இவர், ஜுஜுட்சுவின் தற்காப்புக் கலையை கற்று கொள்ள முடிவு செய்தார். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்த போது ஃபுகுடா ஹச்சினோசுகே என்பவரிடமிருந்து ஜுஜுட்சு தற்காப்புக் கலையை கற்று கொள்ள துவங்கினார்.

இந்த கலையை கற்று கொண்டிருக்கும் போது ஸ்பேரிங் போட்டியில் மற்றொருவருடன் சண்டையிட்டார். ஆனால் ஜுஜுட்சுவில் காணப்பட்ட சில மூவ்கள் மிகவும் ஆக்ரோஷமாக மற்றும் ஆபத்தாக இருப்பதை கண்டார். இதனை தொடர்ந்து தீவிரமாக யோசித்த கனோ ஜிகோரோ, ஜுஜுட்சு காலையில் சில மாற்றங்களை செய்து சில மேற்கத்திய மல்யுத்த மூவ்களை கலந்தார். தனது இந்த சொந்த யோசனையை அடுத்த ஸ்பேரிங் போட்டியில் பயன்படுத்தி வெற்றி கண்டத்துடன், எதிரில் சண்டையிட்டவருக்கும் பெரியளவில் ஆபத்தை ஏற்படுத்தாமல் இருந்தார்.

Additionally learn… கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றி அமைத்த ஸ்மார்ட் லென்ஸ் – விட்கர்லேவை கௌரவித்த கூகுள்!

இதனை தொடர்ந்து ஆபத்தான நுட்பங்களை கொண்டிருந்த ஜுஜுட்சு கலையை, பாதுகாப்பான கலையாக மாற்றும் முயற்சியில் வெற்றி கண்டார். தனது தனிப்பட்ட தத்துவமான அதிகபட்ச திறமை மற்றும் ஆற்றல் பயன்பாடு & தன் மற்றும் பிறரின் பரஸ்பர வளமை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஜூடோவை வடிவமைத்தார் கனோ ஜிகோரோ. பின்னர் தனியாக பயிற்சி கூடம் ஒன்றை (kodokan judo institute) திறந்த இவர், தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெறும் போது பணிவு மற்றும் கடின உழைப்பின் மதிப்பை தனது மாணவர்களுக்கு கற்று கொடுத்தார்.

இவை அனைத்துமே கூகுளின் டூடுலில் ஸ்டோரி போர்டு மூலம் அனிமேஷனில் காட்டப்பட்டுள்ளது. ஜுஜுட்சுவில் பயன்படுத்தப்படும் மிகவும் ஆபத்தான நுட்பங்களை அகற்றி இவர் உருவாக்கிய ஜூடோ விளையாட்டில் ஆர்வம் காட்டிய பெண்களையும் வரவேற்று அவர்களுக்கும் பயிற்சி அளித்தார். தனது சாதனைகள் மூலம் பல விருதுகள் மற்றும் பாராட்டுகளை பெற்ற கனோ ஜிகோரோ கடந்த 1909-ல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC) முதல் ஆசிய உறுப்பினரானார். 4 மே 1938-ல் மறைந்தார். பின் கடந்த 1960-ல்,ஜூடோவை அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் விளையாட்டாக IOC அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Thank You

ஜூடோவின் தந்தை கனோ ஜிகோரோ-வின் பிறந்தநாளையொட்டி ஸ்பெஷல் டூடுலை வெளியிட்ட கூகுள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =

Copy link
Powered by Social Snap
Ads Blocker Image Powered by Code Help Pro
Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.