சூரரை போற்று திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் தனது 40 படத்தில் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாள் அன்று சூர்யா 40 திரைப்படத்திற்கான ஸ்பெஷல் அப்டேட்டை கொடுத்துள்ளார் இயக்குனர் பாண்டியராஜ்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். இவர் டாக்டர் திரைப்படத்தில் சிவ்கார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் கையில் நீண்ட வாளுடன் சூர்யா, திரும்பி நடந்து செல்வது போன்ற போஸ்டர் ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டது. அத்துடன் படத்தில் நடிக்கும் பிரியங்கா, சூரி ஆகியோரின் கேரக்டர்களின் பெயர்கள் பற்றிய அப்டேட்டும் வெளியிடப்பட்டது. ஆதினி என்ற கேரக்டரில் பிரியங்காவும், சூலாமணி என்ற கேரக்டரில் சூரியும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

ட்விட்டரில் சாதனை நிகழ்த்திய ஜகமே தந்திரம் திரைப்படம்: கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்!
அதனை தொடர்ந்து தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன இசையமைப்பாளர் இமானுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்த பாண்டிராஜ், உங்கள் வாழ்த்துக்கு நன்றி. பாடல் ஏதாச்சும் பைனல் பண்ணி கொடுத்தீங்கன்னா சிங்கிள் ரிலீஸ் பண்ணலாம். அப்டேட், அப்டேட்ன்னு கேட்டுகிட்டே இருக்காங்க என கலகலப்பாக கூறியிருந்தார்.

இந்நிலையில் சூர்யா 40 பற்றிய மற்றொரு அப்டேட்டையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பாண்டிராஜ். அதில், அன்பான ரசிகர்களே…சூர்யா 40 படத்தில் 35 சதவீதம் படம் முடிஞ்சுருக்கு. எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு. அடுத்த கட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிஞ்சதும் ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான். எங்க டீம் ரெடியா இருக்கு. டைட்டில் மாஸா முன் அறிவிப்போட வரும். ஜுலை வரை டைம் கொடுங்க ப்ளீஸ் என குறிப்பிட்டுள்ளார். இதனால் சூர்யா 40 திரைப்படத்தின் அடுத்த அப்டேட்க்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.