அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள ‘ஜெய் பீம்‘ அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. சூர்யாவின் 39வது படமான இந்தப்படத்தை தா.செ.ஞானவேல் என்பவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்தப்படப்படத்திற்காக நடிகர் சூர்யாவிற்கு குரல் கொடுத்தது பெருமிதமாக உள்ளதாக தெரிவித்துள்ளார் நடிகர் நரேன்.

‘ஜெய் பீம்’ படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கு இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்தப்படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுல பிரபலங்களும் படக்குழுவினரை வரிசையாக பாராட்டி வருகின்றனர்.

வெறும் நடிகராக இருந்திருந்தால் சூர்யாவுக்கு எங்கள் குரல் ஒலித்திருக்காது – இயக்குனர் சங்கம்!
‘ஜெய் பீம்’ படம் தமிழைப்போல் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்தப்படத்தின் மலையாள மொழிக்கு சூர்யாவுக்காக டப்பிங் குரல் கொடுத்திருப்பவர் நடிகர் நரேன். இதனைப்பற்றி அவர் கூறும்போது, ‘மிகப் பெரிய ஸ்டாரான சூர்யா சாருக்கு குரல் கொடுப்பதில் பெருமிதமடைகிறேன். பெரும் வெற்றி பெற்ற ‘சூரரைப்போற்று’ படத்துக்கும் நான் தான் டப்பிங் பேசினேன். ‘ஜெய்பீம்’ படத்துக்கும் டப்பிங் பேச அழைத்தபோது ஒப்புக்கொண்டேன். ஆனால் நான் நினைத்த மாதிரி இல்லாமல் மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது.

சூர்யா சாரின் நடிப்பு, வசன உச்சரிப்பு மிக நுட்பமாக இருந்ததால் பிரேம் பை பிரேம் கவனித்து பேசியது புது அனுபவமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அதுமட்டுமல்ல, இந்த அனுபவம் சினிமாவை மேலும் கற்றுக்கொள்ள உதவியாக இருந்தது. மலையாளத்தில் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வாய்ப்பு அளித்த சிபு பற்றும் ஜாலி ஆகியோருக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

எதற்கும் துணிந்தவன் சூர்யா; ஆதரவு கரம் நீட்டிய சத்யராஜ்