ஹைலைட்ஸ்:

  • சிவசங்கர் மாஸ்டருக்கு உதவி செய்யும் தனுஷ்
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் சிவசங்கர் மாஸ்டர்

பிரபல டான்ஸ் மாஸ்டரான சிவசங்கருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

சிவசங்கர் மாஸ்டரின் நுரையீரல் 75 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. அவரின் சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 2.5 லட்சம் செலவாகிறது. மாஸ்டரின் குடும்பத்தாரால் அவ்வளவு பெரிய தொகையை தினமும் கொடுக்க முடியாமல் திணறுகிறார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல டான்ஸ் மாஸ்டர் கவலைக்கிடம்இந்நிலையில் இது குறித்து அறிந்த நடிகர் சோனு சூத், சிவசங்கர் மாஸ்டரின் சிகிச்சைக்கு நிதியுதவி செய்ய முன் வந்திருக்கிறார். இந்நிலையில் மாஸ்டருக்கு தனுஷும் உதவி செய்ய முன் வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

சிவசங்கர் மாஸ்டரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். மாஸ்டரின் மூத்த மகனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கவலைக்கிடமாக இருக்கிறார். இளைய மகன் அஜய் கிருஷ்ணா தான் தங்கள் தந்தைக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

சிவசங்கர் மாஸ்டர் குடும்பத்தின் நிலை அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர்கள் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்வதாக தெரிவித்திருக்கிறார்கள்.