ஹைலைட்ஸ்:

  • சர்வைவர் நிகழ்ச்சியில் அனிகா?
  • சர்வைவர் நிகழ்ச்சியில் விக்ராந்த் பங்கேற்பு?

வெளிநாடுகளில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சி சர்வைவர். தற்போது அது தமிழிலும் வரப் போகிறது. தமிழ் சர்வைவர் நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. எப்பொழுதும் ஃபிட்டாக இருக்கும் அர்ஜுன் தான் இந்த நிகழ்ச்சிக்கு சரியானவர் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் உடல் மற்றும் மன வலிமையை சோதித்துப் பார்க்கவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸுக்கு நிச்சயம் கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சர்வைவர் நிகழ்ச்சியில் என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

மேலும் நடிகர் நந்தா, விஜய்யின் தம்பி விக்ராந்த், விஜயலட்சுமி, பிகில் பாண்டியம்மா இந்திரஜா, விஜே பார்வதி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வசதியாக தாங்கள் கமிட்டான வேலைகளை முடித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

வெளிநாட்டில் ஒரு தீவில் இந்த நிகழ்ச்சியை ஷூட் செய்யப் போகிறார்களாம். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர், போட்டியாளர்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிக்கு வரும் விஜய் சேதுபதி ‘மகள்’: சம்பளம் ரூ. 1 கோடிப்பு