ஹைலைட்ஸ்:

  • டீனேஜில் தனுஷ் மாதிரியே இருந்த ரத்னகுமார்
  • உருவ ஒற்றுமை பற்றி தனுஷிடம் கூறிய ரத்னகுமார்

தனுஷின் பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். அதில் இயக்குநரும், விஜய்யின் மாஸ்டர் படத்தின் வசனகர்த்தாவுமான ரத்னகுமார் போட்ட வாழ்த்து ட்வீட் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

தான் டீனேஜில் இருந்தபோது எடுத்த புகைப்படத்தையும், தனுஷின் புகைப்படத்தையும் சேர்த்து ட்விட்டரில் வெளியிட்டு ரத்னகுமார் கூறியதாவது,
டீனேஜ் காலங்களில் நான் தனுஷ் சார் மாதிரியே இருப்பதாக பலர் என்னிடம் கூறினார்கள். அதை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர் என் இன்ஸ்பிரேஷன். நான் அவரை சந்தித்தபோது இதை தெரிவித்தேன். அவர் ஒரு ஸ்மைல் பண்ணிவிட்டு, ஓ, இது கடவுளின் அருள் என்றார் என ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

ரத்னகுமாரின் ட்வீட்டை பார்த்த தனுஷ் ரசிகர்களோ, செம ப்ரோ, ஒரே மாதிரி தான் இருக்கிறீர்கள் என கூறியுள்ளனர்.

ஒரு சிலரோ, தனுஷ் சாரிடம் நீங்கள் கதை சொல்ல அதை அவர் ஓகே செய்துவிட்டதாக கூறப்படுகிறதே. அது உண்மையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

கெரியரை பொறுத்தவரை லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோரை வைத்து இயக்கி வரும் விக்ரம் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றி வருகிறார் ரத்னகுமார். அதனால் விக்ரம் பட அப்டேட் சொல்லுமாறு ரசிகர்கள் அவ்வப்போது ரத்னகுமாரிடம் கேட்கிறார்கள்.

முன்னதாக அவர் மாஸ்டர் படத்தில் வேலை செய்தபோது விஜய் ரசிகர்கள் ரத்னகுமாரிடம் தான் அடிக்கடி அப்டேட் கேட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து நடந்த இரவு நடந்தது என்ன?: யாஷிகாவின் நண்பர் புது தகவல்