ஹைலைட்ஸ்:

  • தூக்கச் சொல்லி ட்வீட் போட்ட போலி பவித்ரா லக்ஷ்மி
  • ஒரேயடியாக தூக்கிய மீம்ஸ் கிரியேட்டர்கள்
  • பவித்ரா லக்ஷ்மியை வைத்து மீம்ஸ் போட்ட நெட்டிசன்ஸ்

சின்னத்திரை, பெரிய திரை பிரபலங்களின் பெயர்களில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் இருக்கின்றன. சில சமயங்களில் ஒரிஜினலை விட போலி கணக்கை பின்தொடர்வோர் அதிகம் இருப்பார்கள்.

யோகி பாபு, கவுண்டமணி, மணிரத்னம் என்று பலர் பெயரில் ட்விட்டரில் போலி கணக்குகள் இருக்கின்றது. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி கோலிவுட்டில் ஹீரோயினாகியிருக்கும் பவித்ரா லக்ஷ்மியையும் போலி ஆசாமிகள் விடவில்லை.

பவித்ரா லக்ஷ்மி பெயரில் ட்விட்டரில் இருக்கும் போலி கணக்கில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு என்னை தூக்குங்கள் என்றார். அவ்வளவு தான் இது, இதை தான் எதிர்பார்த்தோம் செல்லம் என்பது போன்று மீம்ஸ் கிரியேட்டர்கள் எல்லாம் கிளம்பி வந்துவிட்டார்கள்.
சூர்யா, விஷால் என்று பலரின் படங்களை வைத்து பவித்ரா லக்ஷ்மி பற்றி மீம்ஸ் போட்டுவிட்டனர்.

தூக்கத் தானே சொன்னீங்க பவித்ரா என்று ஜேசிபியில் எல்லாம் அவரை உட்கார வைத்து மீம்ஸ் போட்டுவிட்டனர்.
சூரரைப் போற்று விமானத்தின் மீது பவித்ரா லக்ஷ்மியை உட்கார வைத்துவிட்டார்கள்.
பாகுபலி பிரபாஸ் லிங்கத்திற்கு பதில் பவித்ராவை தூக்கிச் செல்லும் மீம்ஸ் தான் டாப். அதை பார்த்து குபீரென்று சிரிக்காதவர்களே இல்லை.

திரும்பும் பக்கம் எல்லாம் தன்னை பற்றிய மீம்ஸுகளை பார்த்த பவித்ரா லக்ஷ்மி தன் ட்விட்டர் கணக்கு பக்கத்தை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கூறியிருப்பதாவது,

மக்களே, இது தான் என்னுடைய ஒரே ட்விட்டர் கணக்கு. என்னை பற்றிய அப்டேட்டுகளை தெரிந்து கொள்ள இந்த கணக்கை மட்டும் ஃபாலோ செய்யவும். போலி கணக்குகளில் வருபவைக்கு நான் பொறுப்பு அல்ல என தெரிவித்துள்ளார்.

பவித்ரா லக்ஷ்மி விளக்கம் அளித்த பிறகும் அவரின் போலி கணக்கில் இருந்து புகைப்படங்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கழுத்தை நெறிக்கும் கடன்: சன் டிவியுடன் 5 பட டீலில் கையெழுத்திட்ட சிவகார்த்திகேயன்