ஹைலைட்ஸ்:

  • கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சினேகா
  • சினேகாவின் டிராமா வீடியோவை வெளியிட்ட பிரசன்னா

திரையுலக பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி போடும்போது புகைப்படம், வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். நாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டோம், அப்போ நீங்க என்று கேட்கிறார்கள்.

நம்மை பார்த்து பலர் தடுப்பூசி போடுவார்கள் என்கிற நம்பிக்கையில் தான் புகைப்படம், வீடியோக்களை வெளியிடுகிறார்கள். இந்நிலையில் நடிகர் பிரசன்னா தன் மனைவியும், நடிகையுமான சினேகாவுடன் சென்று நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்தவர்கள் பிரசன்னாவை தான் கிண்டல் செய்தார்கள். புகைப்படத்தில் பிரசன்னா கொடுத்த முகபாவனையை பார்த்தவர்கள் ஒரு சின்ன ஊசிக்கு இந்த அக்கப்போரா என்று கேட்டார்கள்.

உங்கள் மனைவி சினேகாவை பாருங்கள் என்ன அழகாக, சிரித்த முகமாக ஊசி போட்டிருக்கிறார் என்று ரசிகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் பிரசன்னா இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதை பார்த்த ரசிகர்களோ, அண்ணா மன்னித்துவிடுங்கள், அவசரப்பட்டு பேசிட்டோம். நீங்கள் தைரியசாலி தான் என்று தெரிவித்துள்ளனர்.

பிரசன்னா வெளியிட்ட வீடியோவில் நர்ஸ் ஊசியை கொண்டு வர சினேகா தள்ளித் தள்ளிப் போகிறார். ஆட்டம் காட்டிய சினேகாவுக்கு ஒரு வழியாக ஊசியை போட்டுவிட்டார் அந்த நர்ஸ். இதை ஊசி டிராமா என்று தெரிவித்துள்ளார் பிரசன்னா.

மேலும் 84 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் போட வரும்போதும் இப்படித் தான் நடக்கும் என்று பிரசன்னா தெரிவித்துள்ளார். என்னம்மா சினேகா, இப்படி பண்றீங்களேமா என்று ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் எமோஜியை கமெண்ட் பாக்ஸில் போட்டுள்ளனர்.

சூப்பர் மார்க்கெட்டில் காதலரை இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த ஸ்ருதி