ஹைலைட்ஸ்:

  • நடிகை ஷெரினுக்கு கொரோனா தொற்று
  • 2 டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா பாதிப்பு

தனுஷின் துள்ளுவதோ இளமை படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ஷெரின். தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் அவரால் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெறமுடியவில்லை.

பல ஆண்டுகளாக காணாமல் போன ஷெரின் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஷெரின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஷெரின் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,

எனக்கு கோவிட் 19 பாசிட்டிவ் என்று வந்திருக்கிறது. கடந்த 3-4 நாட்களில் என்னை தொடர்பு கொண்டவர்கள் தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, விரைவில் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஷெரின் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸும் எடுத்துக் கொண்டார். அப்படி இருந்தும் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

தடுப்பூசி போட்டுக் கொண்டதால் ஷெரினுக்கு பெரிதாக பாதிப்பு இருக்காது என்று நம்பப்படுகிறது.

ஷெரினின் இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

தைரியமாக இருங்கள். அது தான் இந்த நேரத்தில் முக்கியம். உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

Mayilsamy Petrol Gift: மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக கொடுத்த மயில்சாமி: பெரிய பணக்காரர் தான்