ஹைலைட்ஸ்:

  • கொரோனா தடுப்பூசி போடும் பிரபலங்கள்
  • தடுப்பூசி போடும் வீடியோவை வெளியிடும் பிரபலங்கள்
  • பிரபலங்களை விளாசிய நடிகை ஆஷா நெகி

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு திரையுலக பிரபலங்கள் மக்களை வலியுறுத்தி வருகிறார்கள். தாங்கள் தடுப்பூசி போடும்போது அதை வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

சமூக வலைதளங்கள் பக்கம் சென்றாலே பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை அதிக அளவில் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் இது குறித்து நடிகை ஆஷா நெகி இன்ஸ்டாகிராமில் விளாசி போஸ்ட் போட்டிருக்கிறார். தடுப்பூசி வீடியோக்கள் பற்றி ஆஷா நெகி கூறியிருப்பதாவது,

தடுப்பூசி வீடியோக்களை வெளியிடும் நடிகர்கள், நடிகைகளே, விழிப்புணர்வு ஏற்படுத்துவது சரி தான். ஆனால் ரொம்ப ஓவர் ஆக்டிங் பண்ணாதீர்கள். பார்க்கவே பயங்கர கடுப்பாகிறது. தடுப்பூசி போடும் போது வீடியோ எடுக்கும் நபரையும் அழைத்துச் செல்கிறார்களா இல்லை மருத்துவமனையே அந்த வசதி செய்து கொடுக்கிறதா என்று மக்கள் கேட்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

ஆஷா நெகியின் போஸ்ட்டை பார்த்த நடிகை அனிதா ஹசநந்தனி உள்ளிட்ட சின்னத்திரை பிரபலங்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் எமோஜியை கமெண்ட் பாக்ஸில் போட்டுள்ளனர்.

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் முன்னாள் காதலியான அங்கிதா லோகந்தே, தான் தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் ஊசியை பார்த்து பயந்தார். இந்நிலையில் ஆஷாவின் போஸ்ட்டை பார்த்தவர்களோ, இது அங்கிதாவுக்காகத் தான் என்கிறார்கள்.

நாங்கள் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் ஆஷா. ஒரு நடிகையாவது நம்மை போன்று யோசிக்கிறார் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டபோது பாலிவுட் பிரபலங்கள் தங்கள் வீட்டில் ஒர்க்அவுட் செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்கள். அதை பார்த்த பிரபல டான்ஸ் மாஸ்டரும், இயக்குநருமான ஃபரா கான் கடுப்பாகி அவர்களை விளாசினார்.

மக்கள் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படும் இந்த நேரத்தில் இப்படி பொறுப்பில்லாமல் ஒர்க்அவுட் வீடியோ வெளியிடாதீர்கள். இனியும் அந்த வீடியோக்களை யாராவது வெளியிட்டால் அவர்களை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்திவிடுவேன் என்றார் ஃபரா கான்.

ஐஸ்வர்யா ராயை கணவரிடம் இருந்து அபகரிக்க விரும்பிய பிரபல நடிகர்