திருமணத்திற்கு பிறகு போயஸ் கார்டனில் வசிக்க முடிவு செய்திருக்கிறாராம் நயன்தாரா.

நயன்தாரா

தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா தன் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் எழும்பூரில் வசித்து வருகிறார். நயன்தாரா தற்போது கை நிறைய படங்கள் வைத்திருப்பதால் திருமண தேதியை முடிவு செய்யவில்லை. கையில் இருக்கும் படங்களை முடித்து பிறகே திருமதி ஆவது என்று முடிவு செய்திருக்கிறாராம்.

வீடு

திருமணத்திற்கு பிறகு அமைதியான இடத்தில் வசிக்க விரும்புகிறார் நயன்தாரா. இந்நிலையில் தான் போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் அபார்ட்மென்ட் குறித்து அவருக்கு தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து போயஸ் கார்டனுக்கு சென்று பார்த்தவருக்கு அந்த அபார்ட்மென்ட் மிகவும் பிடித்துவிட்டதாம்.

போயஸ் கார்டன்

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு அபார்ட்மென்ட்டுகளை வாங்கியிருக்கிறாராம் நயன்தாரா. அது 4 படுக்கையறைகள் கொண்ட அபார்ட்மென்ட்டுகள். கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நயன்தாராவுக்கு போயஸ் கார்டனில் காஸ்ட்லி அபார்ட்மென்ட் வாங்குவது எல்லாம் பெரிய விஷயமே இல்லை.

தனுஷ்

நயன்தாராவின் நண்பரான தனுஷும் போயஸ் கார்டனில் குடியேறவிருக்கிறார். அவர் தன் மாமனார் ரஜினிகாந்தின் பங்களா அருகே பிரமாண்டமான வீடு கட்டி வருகிறார். ஹாலிவுட் படத்தில் நடிக்கச் செல்லும் முன்பு அந்த வீட்டிற்கு பூஜை போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.