2019ஆம் ஆண்டு வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளியாகி, தமிழ்சினிமாவில் பல அதிர்வலைகளை உண்டாக்கிய படம் ‘அசுரன்‘. பூமணியின் வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் வாயிலாக நான்காவது முறையாக இணைந்தனர் தனுசும் வெற்றிமாறனும். ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள்.

வடசென்னை இரண்டாம் பாகம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியார், பசுபதி நடிப்பில் ‘அசுரன்’ திரைப்படம் வெளியானது. தனுஷ் – வெற்றிமாறன் காம்போவில் வெளியான முந்தைய படங்களை போல இந்தப்படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

தனுஷ் மற்றும் மஞ்சுவாரியாரின் நடிப்பு பாராட்டப்பட்ட இந்தப்படத்தில், பிரகாஷ் ராஜ், டீஜெய் அருணாச்சலம், அம்மு அபிராமி, கென் கருணாஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.நடிகர் கருணாஸ் மகன் கென்னின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தப்படத்தில் அவர் மனைவி சைந்தவி பாடியிருந்த ‘எள்ளுவய பூக்கலையே’ பாடல் பலரையும் கவர்ந்திருந்தது குறிப்பிடத்தகது.

சன்னி லியோனுடன் ஜாலி செல்பி: நடிகர் சதீஷ் பகிர்ந்த புகைப்படம்!இந்நிலையில் ‘அசுரன்’ படம் வெளியாகி இரண்டுஆண்டுகள் நிறைவடைந்ததை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். அதேபோல் நடிகர் தனுஷும் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அசுரன்’வெளியாகி இரண்டுஆண்டுகள் நிறைவடைந்ததை குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷ் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை தொடர்ந்தும் பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். வெற்றிமாறனும் தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன்.