ஹைலைட்ஸ்:

  • ரூ. 7 கோடி வசூல் செய்த மாநாடு
  • சிங்கப்பூர் பாக்ஸ் ஆபீஸில் மாநாடு முதலிடம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா மிரட்டியிருக்கும் மாநாடு படம் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி ஒரு வழியாக நேற்று தியேட்டர்களில் ரிலீஸானது.

இந்நிலையில் மாநாடு படம் ரிலீஸான அன்று தமிழகத்தில் மட்டும் ரூ. 7 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் பண பிரச்சனை ஏற்பட்டதால் மாநாடு படத்தின் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

அய்யோ பாவம், சிம்பு பட்ட கஷ்டம், விட்ட கண்ணீர் எல்லாம் வீணாப் போச்சே

மேலும் படம் ரிலீஸான சில மணிநேரத்தில் அதை ஆன்லைனில் கசிய விட்டது தமிழ் ராக்கர்ஸ். இதை எல்லாம் தாண்டி மாநாடு படம் ரூ. 7 கோடி வசூல் செய்திருப்பது பெரிய விஷயம் என்று சிம்பு ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

அது மட்டும் அல்ல சிங்கப்பூர் பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தை பிடித்திருக்கிறது மாநாடு. மேலும் மலேசியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

மாஸ்டர், அண்ணாத்த, கர்ணனை அடுத்து ரிலீஸான அன்றே தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படமாக ஆகியிருக்கிறது மாநாடு.

படத்தை பார்த்த அனைவரும் அது குறித்து சமூக வலைதளங்களில் நல்லவிதமாக தெரிவித்து வருவதும் வசூல் சாதனைக்கு வழிவகுத்து இருக்கிறது. வார இறுதி நாட்களில் மாநாடு படம் வசூலில் சக்கை போடு போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.