ஹைலைட்ஸ்:

  • நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் மரணம்.
  • ரசிகர்களும், திரைத்துறையினரும் இரங்கல்.
  • நடிகர் சூரி பவுன்ராஜ் மறைவிற்கு இரங்கல்.

கொரோனா, மாரடைப்பு என பல சினிமா பிரபலங்கள் தொடர்ச்சியாக மரணமடைந்து வருவது திரைத்துறையினர் மத்தியிலும், ரசிகர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் பொன்ராமின் இணை இயக்குனரும் நடிகருமான பவுன்ராஜ் மாரடைப்பால் மரணமடைந்துள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் பொன்ராமின் நெருங்கிய நண்பரான பவுன்ராஜ் அவர் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகவும், நடிகரகாவும் பணியாற்றியுள்ளார். கிராமத்து ஸ்லாங்கில் இவர் பேசும் நக்கல் காமெடி வசனங்கள் ரசிகர்களிடம் இவரை பிரபலமாக்கியது. ரஜினிமுருகன் படத்தில் இவர் பேசும் இதென்னடா மதுரைக்காரனுக்கு வந்த சோதனை வசனம் மிகப்பிரபலம்.

இந்நிலையில் மாரடைப்பால் மரணமடைந்துள்ள பவுன்ராஜ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பவுன்ராஜ். அதில், #RIPPawnraj வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் அவருக்கு ஆழ்ந்த இரக்கங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மனைவியை அடித்து துன்புறுத்திய பிரபல நடிகர்: உடம்பில் காயங்களுடன் தூக்கிட்டு தற்கொலை!
அவரது திடீர் மரணம் தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பவுன்ராஜூடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள நடிகர் சூரியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், அண்ணன் பவுன்ராஜுடன் நடிச்சது இன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு, அப்படி ஒரு இயல்பான நகைச்சுவை நடிகன்! அண்ணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிகழும் மரணங்கள் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி வருகிறது.