ஹைலைட்ஸ்:

  • விருமன் குறித்து அப்டேட் கொடுத்த கார்த்தி
  • முத்தையாவுக்காக தர லோக்கலாக இறங்கிய கார்த்தி

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் விருமன். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விருமன் படம் மூலம் இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி நடிகையாக அறிமுகமாகிறார்.

விருமன் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடந்து வருகிறது. இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து மதுரைக்கு வந்த தனக்கு இந்த ஆளவுக்கு ஆதரவு அளிக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் கார்த்தி.

அவர் தன் ரசிகர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது விருமன் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் தர லோக்கலாக இருக்கும் என்று தெரிவித்தார் கார்த்தி.

கார்த்திக்கும், தர லோக்கல் கதாபாத்திரத்திற்கும் அப்படி ஒரு பொருத்தம். அவர் தர லோக்கலாக இறங்கி அட்டகாசம் செய்தாலே அந்த படம் ஹிட் தான். அதனால் விருமன் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்கிறார்கள் ரசிகர்கள்.

விருமன் படத்தை சூர்யா தன் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். முன்னதாக முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்தில் நடித்திருந்தார் கார்த்தி. அது அவரின் கெரியரில் முக்கியமான படமாக அமைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலினால் பொங்கலுக்கு வராத எதற்கும் துணிந்தவன்?