இந்நிலையில்தான் நேற்று ஹர்திக் பாண்டியாவுக்கு வீசினார் ஒரு பவுன்சரை இந்தியாவின் அதிவேக பவுலர் உம்ரன் மாலிக் அது எகிறி ஹர்திக் பாண்டியாவின் ஹெல்மெட் கம்பியைத் தாக்கியது, ஹெம்லெட் கம்பி மட்டும் இல்லையெனில் என்ன நடந்திருக்கும் என்பது பயங்கரம். உம்ரன் மாலிக்கின் டாப் 5 பந்துகள் இதுவரை
153.3 km/h, 153.1 km/h, 152.4 km/h, 152.3 km/h and 151.8 km/h என்று பதிவாகியுள்ளது. இந்த ஷோயப் அக்தர் பீற்றிக்கொள்வதையெல்லாம் உடைத்து விடுவார் போலிருக்கிறது.
மாலிக் கடந்த சில மாதங்களாக அவர் ஆட வந்த பிறகு நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றார். இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்தியாவின் எதிர்கால அணியில் தவிர்க்க முடியாத பவுலராக மாலிக் இருப்பார் என்கிறார் ரவி சாஸ்திரி.
“அவர் சீரான முறையில் வேகம் காட்டுகிறார், அவருடைய அணுகுமுறை எனக்குப் பிடிக்கும். இந்தப் பையனால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். இந்த பையன் உண்மையான வேகத்தைப் பெற்றிருக்கிறான், அவர் சரியான சரியான இடத்தில் வீசினால் அவர் பல பேட்டர்களை தொந்தரவு செய்யப் போகிறார். அவரைச் சரியாகக் கையாள்வதுதான் நீங்கள் செய்ய வேண்டும். அவருக்கு சரியான செய்திகளை கொடுங்கள். நீங்கள் அவருடன் தொடர்பு கொள்ளும் விதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அவருடைய திறமையில் சந்தேகம் ஏதுமில்லை. இந்த பையன் ஒரு இந்திய வீரர்” என்று சாஸ்திரி கூறினார்.
டி20 உலகக்கோப்பைக்கு ஆஸ்திரேலியாவுக்கு இவருக்கும் ஒரு டிக்கெட் போட்டு விட வேண்டியதுதான் என்கின்றனர் கிரிக்கெட் பண்டிதர்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Most sensible Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.