சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்தது குறித்து நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அண்ணாத்த படத்தை இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த இயலவில்லை. இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்துக்கு முன்னதாகவே அண்ணாத்த படத்தின் பெரும்பாலான காட்சிகளை எடுத்து முடித்துவிட்டது படக்குழு.

இந்நிலையில் அண்மையில் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று ரஜினிகாந்த் இந்தியா திரும்பிய பின்ன்னர் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை துவங்கினார்கள் படக்குழுவினர். அதனை தொடர்ந்து இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மேற்கு வங்கத்தில் நடைபெற்றது.இந்நிலையில் தற்போது சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் ‘அண்ணாத்த’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்ட இடைவெளிக்கு பின் படம் இயக்கும் ‘காதல்’ பட இயக்குனர்: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
இந்நிலையில் , அண்ணாத்த படத்தின் டப்பிங் பணியை முடித்த காமெடி நடிகர் சதீஷ், தனது ட்விட்டர் பக்கத்தில்,அண்ணாத்த டப்பிங் முடிந்தது. தலைவர் ரஜினிகாந்த் உடன் நடிக்கும் கனவை நனவாக்கிய இயக்குனர் சிவா, சன் பிக்சர்ஸ்… கடவுள் மற்றும் சினிமா ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். அண்மையில் நடிகை மீனாவும் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அண்மையில் அறிவித்தனர். இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 4.11.2021 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும், விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் அறிவித்திருந்தனர். இந்நிலையில் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது ரசிகர்கள் மத்தியில் எதர்பார்ப்பை கிளப்பியுள்ளது.