சிவகார்த்திகேயன் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பில் உள்ள படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘டாக்டர்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப் குமார் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்கியுள்ள படம் ‘டாக்டர். இந்த படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் பிரியங்கா மோகன். இவர்களுடன் யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷன் தயாரித்துள்ளது.

‘டாக்டர்’ படம் முதலில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வேலைகள் நடைபெற்று வந்ததால் பட வெளியீட்டை ஒத்தி வைத்தனர் படக்குழுவினர். அதனை தொடர்ந்து மே மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட திட்டமிட்டனர் படக்குழுவினர்.

ஹனிமூனுக்கு போன இடத்தில் நீச்சலுடையில் ஆட்டம்: வைரலாகும் வித்யுலேகா புகைப்படங்கள்!இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரிக்க துவங்கியதால் ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது. இதனை தொடர்ந்து அண்மையில் தமிழ் நாட்டில் திரையரங்குகள் திறக்கப்ட்டதை தொடர்ந்து இந்தப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தினர் படக்குழுவினர். வரும் அக்டோபர் 9 ஆம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது ‘டாக்டர்’.

இந்நிலையில் அண்மையில் இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இந்தப்படத்தில் இடம்பெறும் ‘செல்லம்மா’ பாடலின் கிளிம்ப்ஸ்வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

படம் ரிலீஸ் பண்ண விடமாற்றங்க.! புலம்பி தள்ளிய ப்ளூ சட்டை மாறன்