ஹைலைட்ஸ்:

  • மூன்றாவது முறையாக அஜித்தை இயக்கும் ஹெச். வினோத்
  • நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் அஜித்

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை படம் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாகவிருக்கிறது.

வலிமையை அடுத்து அஜித்தை இயக்கப் போவது யார் என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில் மூன்றாவது முறையாக வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்.

நேர்கொண்ட பார்வை, வலிமையை அடுத்து தல 61 படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கவிருக்கிறாராம். தல 61 படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக எஸ்.ஜே. சூர்யாவின் வாலி, வெங்கட் பிரபுவின் மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தார்.

மங்கத்தாவில் தல செய்த அட்டகாசத்தை பார்த்த ரசிகர்கள் அந்த படத்தின் இரண்டாம் பாகம் வேண்டும் என்று ஆண்டுக் கணக்கில் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மங்காத்தா 2 படத்தை இயக்க வெங்கட் பிரபுவும் ரெடி தான். ஆனால் இதுவரை காலம் கைகூடவில்லை.

சூர்யா ஒரு உதவியும் செய்யல, எட்டிக்கூடப் பார்க்கல: ராசாக்கண்ணு மனைவி