கடந்த 2019 ஆம் ஆண்டு பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்து வெளியான படம் ஒத்த செருப்பு. படம் முழுவதும் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம் பெறும் வகையில் படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள்.

பல்வேறு விருதுகளையும் தட்டி சென்ற இந்தப்படம் தேசிய விருதையும் வென்றது. இந்தப் படத்தை இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யத் திட்டமிருப்பதாக அண்மையில் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார் பார்த்திபன். அதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து தற்போது அபிஷேக் பச்சன் நடிப்பில் இந்தியில் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை ரீமேக் செய்து வருகிறார் பார்த்திபன்.

இந்நிலையில் ஒரு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பார்த்திபன், எனக்கு விஜய்க்கு கதை சொல்லி அவரை இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதுவும் விரைவில் நடக்கும் என்று கூறியிருக்கிறார். அவர் இவ்வாறு கூறியிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை கிளப்பியுள்ளது.

சிம்பு ரொம்ப மோசம்லாம் கிடையாது.. அவரை பற்றி நெறைய சீக்ரெட் தெரியும் – வெங்கட் பிரபு!
விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்‘ படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப்படத்தை தொடர்ந்து வம்சி பைடிபல்லி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் விஜய்.

அடேங்கப்பா அண்ணாத்தே வசூல் இவ்வளவா?