Memes
oi-Jaya Chitra
சென்னை: நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதைப் பற்றி சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

வேலைக்கு செல்வதற்கு வண்டிக்கு பெட்ரோல் போட்ட காலம் போய், இப்போது வண்டிக்கு பெட்ரோல் போடுவதற்காகவே ஓவர்டைம் பார்க்க வேண்டிய காலம் வந்து விட்டது. அந்தளவிற்கு பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வுக்கு பயந்தே பலர் சைக்கிளுக்கு மாறி வருவதாக ஜாலியாக கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளங்களில்.

விலை உயர்வுக்கு ஆயிரத்தெட்டு காரணங்கள் சொல்லப்பட்டாலும், பாதிப்பு என்னவோ பாவப்பட்ட மக்களுக்குத்தான். அதிலும் குறிப்பாக அன்றாடம் இருபது ரூபாய்க்கும், முப்பது ரூபாய்க்கும் வண்டிக்கு பெட்ரோல் போட்டவர்கள், இப்போது அப்படிக் கேட்டால் பாட்டில் மூடி அளவுக்குக்கூட பெட்ரோல் கிடைப்பதில்லை என தங்களது வேதனையைக்கூட ஜாலியாக கலாய்த்து வருகின்றனர் மீம்ஸ்களில்.

போகிற போக்கைப் பார்த்தால் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்குத்தான் பெண் தருவேன் எனக் கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்பது போன்ற மீம்ஸ்கள் அல்டிமேட்.

இதோ அப்படியாக சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக…







English abstract
Those are some jolly memes assortment at the petrol value hike.
Tale first printed: Thursday, April 7, 2022, 18:47 [IST]