நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான வேலையில்லா முதல் பட்டதாரி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் எதுவும் சொல்லி கொள்ளும்படியான வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் அதற்கான காரணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஷான் ரோல்டன்.

தனுஷ் ஷான் ரோல்டன் கூட்டணியில் உருவான முதல் படமான ‘பவர் பாண்டி‘ படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இருவரும் ‘வேலையில்லா பட்டதாரி 2‘ படத்தில் இரண்டாவது முறையாக இணைந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள், பின்னணி இசை எதுவும் ரசிகர்களை கவரவில்லை.

அதனை தொடர்ந்து சில சமயங்களில் ஷான் ரோல்டனிடம் தயவு செய்து மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைத்து விடாதீர்கள் என கிண்டலாக கூறி வந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய தரப்பிலிருந்து ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட போவதாக அறிவித்திருந்தார் ஷான் ரோல்டன். இந்த ட்விட்டை தொடர்ந்து பலரும் ஷான் ரோல்டனிடம், தனுஷ் படத்திற்கு மட்டும் மீண்டும் இசையமைக்க வேண்டாம் என கேலி செய்திருந்தனர்.

அட்டகத்தி பாணியில் ஒரு காதல் படம்: பா.ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!
இதனால் கடுப்படைந்த ஷான் ரோல்டன், தன்னை தொடர்ச்சியாக கலாய்த்து வந்தவர்களுக்காக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஒட்டுமொத்தப் படத்தையும் முடிக்க எனக்கு 3 நாட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன. எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நியாயமற்ற காலக்கெடு அது. ஆனால் சில மோசமான இதயமில்லாத தனுஷ் ரசிகர்கள் அதைப் பற்றி தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய அறிவிப்புகள் உங்களுக்காக இல்லை. நீங்கள் அமைதியாக இருக்கவும்.

மேலும், எனக்கு அன்பையும் ஆதரவையும் கொடுத்த தனுஷ் ரசிகர்களுக்காக மட்டுமே இது. எதிர்காலத்தில் அவருடன் தனித்துவமான பல படங்களில் தொடர்ந்து பணியாற்றுவேன். உங்கள் காதுகளுக்கு உற்சாகமான, மகிழ்ச்சி ததும்பும் இசையைக் கொண்டுவருவேன். அதற்கான சரியான நேரம் வரும் போது என்னை நிரூபிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.