இந்நிலையில் இந்த போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் டெல்லி அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுளளது , அணியின் கேப்டன் என்ற முறையில் ரிஷாப் பண்ட்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .
நான்கு ஆட்டங்களில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மூன்றாவது வெற்றி. ஷாவின் 34 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்த போதிலும், கேப்பிட்டல்ஸை 3 விக்கெட்டுக்கு 149 ரன்களுக்கு கட்டுப்படுத்திய அவர்களின் பந்துவீச்சாளர்களால் இது சாத்தியமானது . டி காக் LSG துரத்தலில் அரை சதம் அடித்தார், ஆனால் லக்னோ பின்னர் தடுமாறி கடைசி ஓவரில்தான் வெற்றியை ஈட்ட முடிந்தது.
தோல்வி குறித்து ரிஷப் பண்ட் கூறும்போது, “பனிப்பொழிவு இப்படி இருக்கும் போது யாரைக் குறை கூற முடியும்? ஆனால் பேட்டிங்கில் சொதப்பினோம் 10-15 ரன்கள் குறைவாக எடுத்தோம். கடைசி வரை 100% கடினமாக ஆட நினைத்தோம், பவர் ப்ளே நன்றாக அமைந்தது, ஆனால் நடு ஓவர்களில்தான் ஆட்டம் மாறிப்போனது. ஸ்பின்னர்கள் நன்றாக வீசினர், ஆனால் நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக பெற்றோம்” என்றார் ரிஷப் பண்ட்.
52 பந்துகளில் 80 விளாசிய ஆட்ட நாயகன் குவிண்டன் டி காக் கூறும்போது, “நான் எனக்கு முன்னால் உள்ளதை இலக்காகக் கொண்டு ஆடுகிறேன். இது ஒரு துரத்தக்கூடிய ஸ்கோர், ஆனால் ஓவராகப் போகாமல் பார்த்துக் கொண்டோம். நாங்கள் விக்கெட்டுகளை கையில் வைத்திருக்க விரும்பினோம். வெளிப்படையாக, ப்ரித்வி ஷா இந்தப் பிட்சில் எப்படி ஆட வேண்டும் என்பதை காட்டினார். மேலும் பிட்ச் மெதுவாகவும் பந்துகள் நின்று வருவதையும் உணர்ந்தேன். எனவே நேராக ஆடுவதுதான் சிறந்தது” என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.