ஹைலைட்ஸ்:

  • தண்டுவட பிரச்சனையால் பவர்ஸ்டார் சீனிவாசன் அவதி
  • மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் பவர்ஸ்டார்

சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் நம்மை எல்லாம் கவர்ந்தவர் பவர்ஸ்டார் சீனிவாசன். அவர் திரையில் வந்தாலே மக்கள் சிரித்துவிடுவார்கள்.

அவர் வனிதா விஜயகுமாருடன் சேர்ந்து பிக்கப் படத்தில் நடித்து வந்தார். படத்திற்காக அவர்கள் மணக்கோலத்தில் இருந்த புகைப்படம் வெளியாகி வைரலானது தனிக்கதை. பிக்கப் படத்தில் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார். படப்பிடிப்பின்போது பவர்ஸ்டார் மயங்கி விழுந்தார்.

பவர்ஸ்டாருக்கு இந்த அளவுக்கு உடம்புக்கு முடியலயா?: ஷாக்கிங் போட்டோஸ்இந்நிலையில் மருத்துவமனையில் நடக்கக் கூட முடியாமல் பவர் ரொம்ப வீக்காக பேசும் வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

பவர் ஸ்டார் நல்லாத் தானே இருந்தார், இப்போ இப்படி பரிதாபமாக இருக்கிறாரே என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

இந்நிலையில் பவருக்கு என்ன பிரச்சனை என்பது தெரிய வந்திருக்கிறது. தண்டுவடத்தில் கிராக் ஏற்பட்டது தெரியாமல் வலியுடனேயே இருந்திருக்கிறார் பவர். வலி அதிகமாகி நடக்க முடியாமல் போன பிறகே மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.

அங்கு பரிசோதனை செய்தபோது தான் தண்டுவடத்தில் பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பவர்ஸ்டாருக்கு ரத்த அழுத்தப் பிரச்சனை என்று ரசிகர்கள் நினைத்த நிலையில் இந்த உண்மை தெரிய வந்திருக்கிறது.