ஹைலைட்ஸ்:

  • உபி முதல்வரை கடுமையாக விமர்சித்த நடிகர் சித்தார்த்.
  • நடிகர் சித்தார்த்தை கூத்தாடி என்று விமர்சித்த யூடிப்பர்.
  • சித்தார்த்தை விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி.

தொடர்ந்து அரசியல் சார்ந்த பதிவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வரும் நடிகர் சித்தார்த், தற்போது நிலவி வரும் கொரோனா பேரிடர் காரணமாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் உத்திர பிரதேச முதல்வர் குறித்து கடுமையான விமர்சனம் வைத்த சித்தார்த்திற்கு எதிராக பாஜகவினர் கடுமையான வார்த்தைகள் கொண்டு ஏசினார்கள். ஒருசிலர் அவரின் தொலைப்பேசி எண்ணை பொதுத்தளத்தில் வெளியிட்டு, அவருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இதனால் ஒருசிலர் அவரை தாக்கி பேசி வருகின்றனர். அந்த வரிசையில் யூடிப்பில் பிரபலமான மாரிதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் சித்தார்த்தை கடுமையாக வசைபாடி, கூதத்தாடி என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அவரின் பதிவிற்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எதிரிகளையும் மதிப்பதுதான் தமிழர் நாகரிகம். அதை மறக்க வேண்டாம். சித்தார்த் தொழிலை பற்றி விமர்சனம் செய்ய நீங்கள் யார்? நீங்கள் வணங்கும் ஈசனும் கூத்தபிரான் தான். நடிகர்கள் கூத்தாடி என்றால் உங்கள் தொழில் வாயாடி. சரியா? பாஜக ஆதரவு நடிகர்கள் இதனை ஏற்று கொள்வார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை தமிழர்கள் பற்றிய சர்ச்சை திரைப்படம்: ஏழு ஆண்டுகள் கழித்து ஓடிடியில் ரிலீஸ்!
ஆனால் அதே நேரத்தில் சித்தார்த்தின் விமர்சனமும் தவறுதான். அவருடைய எதிர்மறை பதிவு அவருக்கே தற்போது திரும்புகிறது. ஆனாலும் அவரை விமர்சனம் செய்பவர்கள் அவருடைய தொழிலை விமர்சனம் செய்வதைத்தான் நான் கண்டிக்கின்றேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார் கஸ்தூரி.

மேலும் ’சித்தார்த்தை திட்டுவதாக நினைத்து எத்தனையோ கலைஞர்கள் வணங்கும் கலைத்தொழிலை கேவலப்படுத்த யாருக்கும் உரிமையில்லை. சித்தார்த்தின் நடிகர்கள் அனைவரின் பிரதிநிதியும் இல்லை. ரஜினி, கங்கனா, குஷ்பு, காயத்ரி ரகுராம், மிதுன் சக்ரவர்த்தி, அக்ஷய் குமார் இவங்களுக்கு பிஜேபி ல என்ன பேரு? என்றும் கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார். அவரின் இந்த பதிவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.