தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கிறார் அந்த உச்ச நடிகை. அவருக்கு மார்க்கெட் இருப்பதால் எத்தனை கோடி சம்பளம் கேட்டாலும் தயாரிப்பாளர்கள் கொடுக்கிறார்கள். நடிகை கஷ்டப்பட்டு உழைத்து பணம் சேர்த்து வைத்திருக்கிறார்.

இந்நிலையில் படங்களை தயாரிக்கலாம் என்று காதலர் ஐடியா கொடுத்தாராம். சரி நல்ல படங்களாக தயாரிக்கலாம் என்றாராம் நடிகை. புதிதாக தயாரிக்க வேண்டாம், ஏற்கனவே உருவாகியிருக்கும் படங்களை வாங்கி வெளியிடுவோம் என்று காதலர் சொல்ல நடிகையும் சரி என்றாராம்.

பல திரைப்பட விழாக்களில் விருது பெற்ற படங்களாக வாங்கி வைத்திருக்கிறார்களாம். ஆனால் அந்த படங்களை ரிலீஸ் செய்தால் வசூல் பெரிதாக இருக்காது. போட்ட பணத்தை எடுக்க முடியாது. நடிகையின் பணத்தை வீணாக்குகிறார் அந்த காதலர் என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

காதலர் விஷயத்தில் நடிகை கணக்கு பார்ப்பது இல்லை. இது அவரின் முந்தைய காதல்களிலும் நடந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக அந்த இளம் நடிகருக்கு நடிகை செலவு செய்த பணத்தை வைத்து பெரிய பட்ஜெட் படமே எடுத்துவிடலாம் என்றார்கள்.

காதலர் என்று வந்துவிட்டால் நடிகை காசை தண்ணீராக செலவு செய்கிறார். இதை அந்த காதலர் நன்கு புரிந்து வைத்துக் கொண்டு செயல்படுகிறார் என்று கோடம்பாக்கத்துகாரர்கள் கூறுகிறார்கள்.