‘அவள் அப்படித்தான்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. ரஜினி, ராதிகா நடிப்பில் வெளியான ‘ஊர்க்காவலன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சித்ரா மாரடைப்பு காரணாமாக காலமானது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் கே.பாலசந்தரால் குழந்தை நட்சத்திரமாக ’அவள் அப்படித்தான்’ படத்தில் அறிமுகமானவர் சித்ரா. தமிழ், மலையாள மொழிகளில் பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிப்பில் முத்திரை பதித்துள்ளார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ‘சேரன் பாண்டியன்’ படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

திருமணத்துக்கு பிறகு சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் குடும்பத்துடன் சென்னையில் செட்டிலாகிவிட்டார். சென்னை சாலிகிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார். நடிகை சித்ராவுக்கு ஸ்ருதி என்ற மகள் உள்ளார். அவர் இந்தாண்டு பிளஸ் டூ முடித்துள்ளார். குழந்தையை வளப்பதற்காகவே சினிமாவில் இருந்து பல ஆண்டுகள் விலகியிருந்தார்.

மாஸ்.. ஸ்டைலிஷ்.. ஹேண்ட்சம்: வேற லெவலில் டிரெண்டாகும் சிம்புவின் கூலான வீடியோ!
சித்ரா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’. கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில் ஃப்ளாஷ் பேக் காட்சியில் பள்ளி மாணவியாக நடிதத்திருந்தார்.சித்ராவுக்கு நேற்றிரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக உயிழ்ந்துள்ளார் சித்ரா.

சித்ராவின் மறைவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சித்ராவின் இறுதிச் சடங்கு இன்று மாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என குடும்பத்தினர் சார்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.