ஹாரூன் இயக்கத்தில் நட்டி நடிக்கும் படத்தில் செம்பருத்தி சீரியல் புகழ் பரதா நாயுடு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நட்டி

ஒளிப்பதிவாளராக இருந்து நடிகரானவர் நட்டி. தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் ஈவு இரக்கமே இல்லாத போலீஸ் அதிகாரியாக நடித்தார் நட்டி. அது வெறும் நடிப்பு என்பதை மறந்து பலரும் நட்டிக்கு போன் செய்து திட்டியிருக்கிறார்கள். இதையடுத்து கர்ணன் படத்தில் நான் நடிக்கத் தான் செய்தேன், அது நிஜமல்ல, என்னை விட்டுவிடுங்கள் என்று ட்வீட் செய்தார் நட்டி.

புதுப்படம்

புதுமுகம் ஹாரூன் இயக்கும் சைக்கோ த்ரில்லர் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் நட்டி. அந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவங்கியது. ட்ரீம் ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவன வி.எம். முனிவேலன் தயாரிக்கிறார்.

அந்த படத்தில் நான்கு ஹீரோயின்கள் இருக்கிறார்கள். ஹீரோயின்களை இன்னும் முடிவு செய்யவில்லையாம். பிளாக் ஷீப் புகழ் நந்தினி, சாஸ்வி பாலா, ப்ரீத்தி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பரதா நாயுடு

நட்டி படத்தில் தானும் நடிப்பதாக செம்பருத்தி சீரியலில் வில்லியாக நடித்த பரதா நாயுடு தெரிவித்துள்ளார். பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள், பரதா நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நட்டி ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்கிறார்.

javascript-Instagram

இன்ஃபினிட்டி

நட்டி நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் இன்ஃபினிட்டி. அந்த படத்தில் வித்யா பிரதீப், முனிஸ்காந்த், ராட்சசன் வினோத் சாகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இன்ஃபினிட்டி படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கிறார் நட்டி என்பது குறிப்பிடத்தக்கது.