ஹைலைட்ஸ்:

  • ராகுல் டான்சே மீது சஞ்சனா கல்ராணி புகார்
  • ரூ. 45 லட்சம் மோசடி செய்துவிட்டார் ராகுல்- சஞ்சனா

கன்னட நடிகையான சஞ்சனா கல்ராணி தன் நண்பர் ராகுல் டான்சே மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இது குறித்து சஞ்சனா கூறியதாவது,

கோவா, கொழும்பு உள்ளிட்ட இடங்களில் இருக்கும் கசினோக்களில் முதலீடு செய்யுமாறு ராகுல் என்னை ஊக்குவித்தார். அந்த கசினோக்களின் மேனேஜர் நான் தான் என்று என்னிடம் கூறினார். கசினோக்களில் முதலீடு செய்தால் நல்ல வருமானம் வரும் என்று கூறினார்.

ராகுலை நம்பி அவர் பெற்றோரிடம் கடந்த 2018ம் ஆண்டு ரூ. 45 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள். இது தொடர்பாக போலீசாரிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உதவி கேட்டேன். ராகுலிடம் இருந்து பணத்தை வாங்கித் தருமாறு கூறினேன்.

அவர்களோ உள்ளூர் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறினார்கள். நீதிமன்றத்திற்கு சென்றபோது காவல் நிலையத்தில் மோசடி புகார் அளிக்குமாறு தெரிவித்தனர் என்றார்.

அண்மையில் தான் கேபில் சென்றபோது டிரைவருடன் பிரச்சனை ஏற்பட்டு காவல் நிலையத்திற்கு சென்றார் சஞ்சனா என்பது குறிப்பிடத்தக்கது.

ச்சீ, இதுக்கு தான் இவ்ளோ சீனானு சொன்னாங்க: குக் வித் கோமாளி அஸ்வின்