விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக சிம்பு, கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் நதிகளிலே நீராடும் சூரியன். இந்தப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு தொற்றி கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தின் போட்டோ ஷுட் நேற்று நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருண் நடிப்பில் ‘ஜோஷ்வா’ படத்தை இயக்கி முடித்துள்ளார் கெளதம் மேனன். இந்த படத்தை தொடர்ந்து தற்போது சிலம்பரசன் நடிப்பில் நதிகளிலே நீராடும் சூரியன் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையுமே வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக சிம்பு, கெளதம் கூட்டணிக்கு இசையமைக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால் மறுபடியும் திரைத்துறை சம்பந்தமான பணிகள் துவங்கியுள்ளன.

பண்டிகை நாளை குறி வைத்து வெளியாகும் ‘டான்’ திரைப்படம்: உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
இந்நிலையில் இந்த படத்தின் போட்டோ ஷுட் நேற்று சென்னையில் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் நதிகளிலே நீராடும் சூரியன் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் இந்தப்படத்தை வெளியிட்ட திட்டமிட்டுள்ளாராம் கெளதம் மேனன். மேலும் இந்தப்படத்தில் எழுத்தாளர் ஜெயமோகனும் இணைய உள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் பணிகளும் கிட்டத்தட்ட அனைத்தும் முடிந்துள்ளது. திரையரங்கு திறப்பு சம்பந்தமான அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர் மாநாடு படக்குழுவினர். ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையில் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார் சிம்பு.