தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இயக்குனர் அவதாரம் எடுத்தவர் விஷ்ணுவர்தன். அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இவர், முதன்முதலாக இந்தியில் சேர்ஷா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ள சேர்ஷா படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார் இயக்குனர் விஷ்ணு வர்தன்.

இந்தப்படம் கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ளது. விஷ்ணு வர்தன் இயக்கியுள்ள இந்தப்படத்தை கரண் ஜோஹர் தயாரித்துள்ளார். இதில் விக்ரம் பத்ரா வேடத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். அவருடன் கியாரா அத்வானி, ஜாவின் ஜாஃப்ரி, ஷிவ் பண்டிட், பவன் சோப்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீவஸ்தவா, இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார்.

இந்நிலையில் சேர்ஷா படம் குறித்து இயக்குனர் விஷ்ணு வர்தன் சில தகவல்களை கூறியுள்ளார். அதில், நமது படத்துக்கு சரியான நடிகர்கள் கிடைத்து விட்டால் 50 சதவீத போரில் நாம் வென்றுவிட்டோம் என்று அர்த்தம். மீதி 50 சதவீதம் அவர்கள் எப்படி நடிக்கப் போகிறார்கள் என்பதில் தான் இருக்கிறது. நான் சந்தித்த புத்திசாலித்தமான மற்றும் அறிவார்ந்த நடிகைகளில் கியாரா அத்வானியும் ஒருவர். அப்படி நான் கடைசியாக சந்தித்த ஒரு நடிகை நயன்தாரா.

கணவரின் ஆபாசப் பட வழக்கு விவகாரம்: வேண்டுகோள் விடுக்கும் நடிகை ஷில்பா ஷெட்டி!
நயன்தாராவுடன் பணிபுரிந்த போது அவர் மிகவும் புத்தி கூர்மையான மற்றும் அறிவார்ந்த பெண் என்பதை உணர்ந்தேன். அதே உணர்வு கியாராவுடன் பணிபுரியும்போதும் எனக்கு ஏற்பட்டது. அவர்களுக்கு காட்சியைப் பற்றிய ஒரு சிறு குறிப்பை கொடுத்தால் போதும், அதை அவர்கள் மிக விரைவாக உள்வாங்கிக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார் விஷ்ணு வர்தன்.

பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஜுலையில் வெளியிட திட்ட்மிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் திரையரங்குகள் இன்னும் திறக்காத காரணத்தால் சேர்ஷா திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடுகின்றனர். பெரும் தொகைக்கு அமேசான் பிரைம் வீடியோ படத்தை வாங்கியுள்ளது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி படம் வெளியாகு என இன்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விஷ்ணு வர்தனின் முதல் இந்தி படம் என்பதால், தமிழ் ரசிகர்களும் இந்தப்படத்திற்காக ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.