ரஜினியுடன் ‘அண்ணாத்த’, விஜய் சேதுபதியுடன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்‘, அட்லி இயக்கத்தில் ஷாருக்கான ஜோடியாக பாலிவுட் படம் உள்ளிட்டவற்றில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. இந்நிலையில் இவர் நடித்துள்ள புதிய படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து விட்டார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நயன்தாரா நடிப்பில் உருவான ’நிழல்’ படம் வெளியானது மலையாளத்தில் வெளியான இந்தப்படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இந்தப்படத்தின் தமிழ் டைட்டிலாக ’மாய நிழல்’ என்ற வைக்கப்பட்டுள்ளது. இதன் இந்த டிரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு நாளை ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

வாங்கிய கடனை திருப்பி செலுத்த மறுப்பு: ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி வீட்டுக்கு சீல்…
குஞ்சாக்கோ போபன், நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ள இந்தப்படத்தை அப்பு என். பட்டாதிரி என்பவர் இயக்கியுள்ளார். மலையாள திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப்படம் தற்போது தமிழில் டப் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் ஓடிடி வெளியீடாக மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நெற்றிக்கண்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ‘அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்து வக்குல ரெண்டு காதல்’ படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்து வருகிறார் நயன்தாரா. இந்நிலையில் ‘மாய நிழல்’ படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

விழுந்து, புரண்டு, நடிச்சு காமிச்சு கதை சொன்னார்; இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன்