சைக்கோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் வேளைகளில் இறங்கினார் மிஷ்கின். அப்போது நடிகர் விஷாலுடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக படத்திலிருந்து விலகினார். இதனை தொடர்ந்து தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் ‘பிசாசு 2‘ படத்தை இயக்குகி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் அஜ்மல் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். ஆண்ட்ரியாவை பிரதானமாக கொண்டு இந்த படத்தின் திரைகதை அமைக்கப்பட்டுள்ளது. பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்தபோஸ்டரில் குளியல் தொட்டியில் ரத்தம் படிந்த கால்களோடு ஆண்ட்ரியா முகம் தெரியாமல் தலைகீழாக கவிழ்ந்து படுத்து கொண்டு கையில் சிகரெட்டை பிடித்திருக்கிறார். இந்த போஸ்டர் இணையத்தில் படு வேகமாக வைரலாகியது. மேலும் போஸ்டரில் இந்த ஆண்டு இறுதிக்குள் பிசாசு 2 படம் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர் படக்குழுவினர்.

புதுச்சேரி முதல்வரை நேரில் சந்தித்து உரையாடிய விஜய் சேதுபதி: வைரலாகும் புகைப்படங்கள்!
இந்நிலையில், நடிகர் அஜ்மல் இந்த படத்தில் இணைந்திருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் அண்மையில் வெளியான நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அஜ்மலின் நடிப்பு பலரிடம் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதியிலே நிறுத்தி வைக்கப்பட்ட பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு அண்மையில் திண்டுக்கலில் உள்ள மீனாட்சிநாயக்கம்பட்டி மீண்டும் துவங்கியது. த்ரில்லர் ஜானரில் உருவாகிவரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிப்பதற்கும், அதனை தொடர்ந்து போஸ்ட் புரோடெக்ஷன் பணிகளை விரைவாக முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.