ஹைலைட்ஸ்:

  • அன்னையர் தின போஸ்ட்டால் விக்கி மீது நயன் ரசிகர்கள் கோபம்
  • காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வரும் விக்னேஷ் சிவன்
  • மீண்டும் காதலர் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா

நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறார்கள். நயன்தாராவுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் அவர் அன்னையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர். அன்னையர் தினம் முடிந்தும் விக்னேஷ் சிவன் மீது கோபமாக இருக்கிறார்கள்.

விக்னேஷ் சிவன் தன் அம்மா, சகோதரியின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்களோ, உங்கள் பிள்ளைகளுக்கு தாயாகப் போகும் நயன்தாராவின் புகைப்படத்தை ஏன் வெளியிடவில்லை என்று கூறி கோபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னதாக கடந்த ஆண்டு அன்னையர் தினத்திற்கு நயன்தாரா தன் கையில் ஒரு குழந்தையை வைத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். வருங்காலத்தில் என் பிள்ளைகளுக்கு தாயாகப் போவரின் கையில் இருக்கும் குழந்தையின் தாய்க்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என்றார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் இந்த ஆண்டு அவர் நயன்தாராவின் புகைப்படத்தை வெளியிடாதது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது. நயன்தாராவை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

கெரியரை பொறுத்த வரை தன் காதலி நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோரை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்து டப்பிங் வேலையை துவங்கவிருக்கிறார்கள். அண்ணாத்த படத்தை தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக நவம்பர் மாதம் 4ம் தேதி வெளியிடவிருக்கிறார்கள்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அண்ணாத்த படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

உங்களை போய் தப்பா நினைச்சு கலாய்ச்சுட்டோமே உதயநிதி ஸ்டாலின்