சார்பட்டா பரம்பரையை அடுத்து பா. ரஞ்சித் இயக்கும் நட்சத்திரங்கள் நகர்கிறது படத்திலும் துஷாரா விஜயன் தான் ஹீரோயின்.

சார்பட்டா பரம்பரை

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் மனைவியாக நடித்த துஷாரா விஜயனை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் மீண்டும் தன் படத்தில் நடிக்க துஷாராவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் ரஞ்சித். அவர் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் துஷாரா தான் ஹீரோயின்.

துஷாரா

நட்சத்திரம் நகர்கிறது காதல் கதை கொண்ட படம். அதில் அசோக் செல்வன், பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஆகியோர் ஹீரோக்களாக நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. துஷாரா ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இந்த படத்தில் ரஞ்சித் என்ன சொல்லப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

வேண்டாம்

ரஞ்சித் தன் சார்பட்டா பரம்பரைக்கு ஹீரோயின் தேடியபோது துஷாரா விஜயன் வேண்டவே வேண்டாம் என்று பலரும் அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அவரோ யார் பேச்சையும் கேட்காமல் துஷாரா மீது நம்பிக்கை வைத்து மாரியம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார். இந்த தகவலை துஷாரா இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.

நன்றி

ரஞ்சித் பற்று துஷாரா கூறியதாவது, எல்லாரும் இந்த பொண்ணு வேணாம்னு சொன்னப்ப இவதான் மாரியம்மானு ஆணி தனமா நம்புன ரஞ்சித் ஐய்யாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது. எல்லாருக்கும் ஒரு சின்ன நம்பிக்கை போதும், எத வேணும்னாலும் பன்னிரலாம். அப்படி ஐய்யா நம்பி, நான் உயிர் குடுத்தவ மாரியம்மா. நான் ரொம்ப விரும்பி மாரியம்மாவாக நடிச்சேன். முதல் பெரிய படம் என்றார்.