‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்திற்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் வரும் ‘ஜோஷ்வா இமை போல் காக்க‘. வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் ரிலீசுக்காக நீண்ட காலமாகவே ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம், ஜோஷ்வா இமை போல் காக்க ஆகிய படங்கள் உருவாகி நீண்ட காலமாக ரிலீஸ்ஆகாமல் நிலுவையில் இருந்தது. இதனிடையில் தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் மட்டும் ஒரு வழியாக கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. மற்ற படங்கள் இன்னும் வெளிவரவில்லை.

அதன்பின்னர் கெளதம் மேனனும் வெப் சீரிஸ், நடிப்பு என பிசியாகி விட்டார். இதனால் துருவ நட்சத்திரம், ஜோஷ்வா இமை போல் காக்க படங்கள் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகத்தில் இருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் போஸ்ட் புரோடெக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம்: நடிகர் விஜய்யின் கோரிக்கை ஏற்பு!
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கபட்ட ‘ஜோஷ்வா’ படத்தின் பணிகள் அனைத்தையும் அண்மையில் கெளதம் முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் படத்தை பார்த்த தயாரிப்பு நிறுவனம், படம் நன்றாக வந்துள்ளதாக கெளதம் மேனனை வாழ்த்தியதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்தப்படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட வேல்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனிடையில் நவரசா வெப் சீரிஸிற்காக சூர்யா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கியுள்ள ‘கிடார் கம்பி மேலே நின்று’ குறும்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. மேலும் மூன்றாவது முறையாக கெளதம், சிம்பு இணையும் ‘நதிகளிலே நீராடும் சூரியன்‘ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.