நயன்தாரா தன் பிறந்தநாளை நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்.

நயன்தாரா

கோலிவுட்டின் முன்னணி நடிகையான நயன்தாரா இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தன் வருங்கால மனைவியின் பிறந்தநாளை பிரமாண்டமான முறையில் கொண்டாடியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

நள்ளிரவு பார்ட்டி

நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி, வான வேடிக்கையுடன் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் நயன்தாரா. இந்த சர்பிரைஸ் பார்ட்டிக்கு விக்னேஷ் சிவன் தான் ஏற்பாடு செய்திருக்கிறார். Nayan, லேடி சூப்பர் ஸ்டார் என்று எழுதப்பட்ட இரண்டு கேக்குளை வெட்டியிருக்கிறார் நயன்தாரா.

Twitter-Karthik

விக்னேஷ் சிவன்

பிறந்தநாள் கேக்கை வெட்டும் முன்பு நயன்தாரா தன் வருங்கால கணவரை கட்டிப்பிடித்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. நயன்தாரா தன் பிறந்தநாளை அசத்துவது போன்று அவரின் பிறந்தநாளையும் ஜமாய்த்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

Twitter-Nayanthara Trends

கண்மணி

வழக்கமாக நயன்தாராவை தங்கமே என்று அழைப்பார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழு சார்பில் நயன்தாராவை வாழ்த்தி போஸ்டர் வெளியிட்டு, இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது, பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்மணி, தங்கமே, என் எல்லாமே என தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

javascript-Instagram