ஹைலைட்ஸ்:

  • ரசிகர்களை கவர்ந்த கிட்டார் கம்பி மேலே நின்று
  • அக்னியில் மிரட்டியிருக்கும் கார்த்திக் நரேன்

ஒன்பது கதைகள் கொண்ட நவரசா ஆந்தாலஜி இன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. அதில் கவுதம் மேனன் இயக்கத்தில் கிட்டார் கம்பி மேலே நின்று கதையில் நடித்திருக்கிறார் சூர்யா.

அவரின் கெட்டப்பை பார்த்தே ரசிகர்கள் அசந்துவிட்டனர். கிட்டார் கம்பி மேலே நின்றை பார்த்தவர்கள் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

அண்ணா வேற லெவல். உங்களுக்காக தான் நெட்ஃப்ளிக்ஸை சப்ஸ்கிரைப் செய்திருக்கிறோம். என்ன ஒரு நடிப்பு, சான்சே இல்லை. நவரசாவில் நேராக ஒன்பதாவது கதைக்கு வந்து கிட்டார் கம்பி மேலே நின்று தான் பார்த்தேன். அருமையாக இருக்கிறது.
ஓடிடி நாயகன் சூர்யா. கவுதம் மேனன், சூர்யா காம்போ என்றுமே சூப்பர் தான் என்று தெரிவித்துள்ளனர்.

ஒரு சிலரோ, ஷார்ட் ஃபிலிம் ஒன்னும் புரியவில்லை அண்ணா என்கிறார்கள். சிலரோ, அண்ணா நெட்ஃப்ளிக்ஸ் ரொம்ப காஸ்ட்லியாக இருக்கு, காசு இல்லை என்று கூறியுள்ளனர்.
மேலும் சிலரோ, டெலிகிராம் லிங்க் இருந்தால் கொடுங்கள் என்று சூர்யாவிடமே கேட்டிருக்கிறார்கள்.

கிட்டார் கம்பி மேலே நின்று கதையை சூர்யா ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்க, கார்த்திக் நரேன் இயக்கிய அக்னி கதையும் பலருக்கும் பிடித்திருக்கிறது.

#SummerOf92 9ம் வகுப்போடு பள்ளியை விட்டு நின்றவரின் ஃபிளாஷ்பேக் கதை தான் இது. அவர் எப்படி வாழ்க்கையில் வெற்றிகரமானவராக ஆகிறார். தன் வாழ்க்கையை பற்றி யோகி பாபு கொடுக்கும் விளக்கம் சிரிக்க வைக்கிரது. கிளைமாக்ஸும் அருமை. கண்டிப்பாக பார்க்க வேண்டும்.